கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை தனியார் மஹாலில் நேற்று வெல்லும் தமிழ்ப்பெண்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், "பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் திட்டங்கள் சலுகைகள் அல்ல, அவை நம் தமிழ்நாட்டு பெண்களின் உரிமை. பெண்களின் உரிமையை நிலைநாட்டிய தமிழ்நாடு முதலமைச்சரின் 2.0 ஆட்சி தொடர நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்" என சிறப்புரை ஆற்றினார். பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி முதலமைச்சரின் ஆட்சி தொடர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.