ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் இன்று ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. சண்முகம் முன்னாள் சங்கச் செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.எம். இராமகவுண்டர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: ஊத்தங்கரை 33 ஏரிகள் இணைப்புத் திட்டத்தில் இணைக்க வேண்டும்; வரும் ஜூலை 5ஆம் தேதி உழவர் தின பேரணி மற்றும் ஜெயா நாராயணசாமி 100வது பிறந்த நாள் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி