கிருஷ்ணகிரி: மின்சாரம் மூலம் புல் நறுக்கும் கருவிகள் வழங்கல்

கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத்துறை துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, 150 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 43 இலட்சத்து 51 ஆயிரத்து 200 திட்ட மதிப்பில், 50 சதவிகித மானியத்தில் (ரூ. 21,75,600) மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் இன்று (01.08.2025) துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை வழங்கினார்கள். உடன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. இளவரசன், கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதாநவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி