கிருஷ்ணகிரி: முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் , முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தைச் சார்ந்த 10 பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உதவித்தொகை, ஊக்கத்தொகை மற்றும் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை இன்று (10.06.2025) வழங்கினார். உடன், கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் (பொ) தனபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி