கிருஷ்ணகிரி: முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு சிறப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.06.2025 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் நலனுக்காக புற்றுநோய், பக்கவாதம், தொழுநோய், காசநோய், கண்பார்வையற்றோர் மற்றும் குள்ளத்தன்மை போன்ற மருத்துவ குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் தொடர்பான முழு விவரத்தினையும் எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.06.2025 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. 

அதுசமயம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி