கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள மகாசாந்தி காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி ஹோமங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் ஊர்வலம் நடந்தது. விழாவை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.