அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த துப்புரவு பணியாளர் சின்ராஜ் என்பவர் அந்த ஓஸ் பைப்பை உடைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வீசி விட்டனர். அங்கு இருந்த மூதாட்டி ஓஸ் பைப்பை எடுத்துக் கொடு என்று கேட்டபோது தகாத வார்த்தையால் திட்டி அடிக்க சென்றனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அவர் "என்னையெல்லாம் ஒன்றும் பண்ண முடியாது. நீ யாரிடம் போய் கம்ப்ளைன்ட் பண்றியோ பண்ணிக்கோ" அப்படி என்று தெனாவட்டாக் கூறிவிட்டு சென்றனர். அவர் இதுமாதிரி பலமுறை ஊரில் உள்ள மக்களிடம் சண்டை வாங்கிக் கொண்டே இருக்கிறார். இதைப் பற்றி ஊராட்சி மன்ற செயலாளர் சர்தார் பாஷா அவரிடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை ஊராட்சி மன்ற செயலாளர் சர்தார் பாஷா மற்றும் துப்புரவு பணியாளர் சின்ராஜ் இவர்கள் இரண்டு பேரும் வெளியில் விற்று விடுகிறார்கள். இவர்களை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.