அதேபோல அந்த பகுதிக்கு செல்ல கான்கிரீட் சாலை அல்லது ஃபேவர் பிளாக் சாலை அமைத்துக் கொடுக்க கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த பகுதியில் 2007-08 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில் அது போலி பட்டா. அந்த பட்டாவிற்கு எந்த சலுகைகளும் கிடையாது என்று தற்போது ஊத்தங்கரை பேரூராட்சி நிர்வாகத்தை கையில் வைத்துள்ள திமுக நிர்வாகமே கூறி எந்த வசதியும் செய்து கொடுக்க மறுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரையிலும் வீட்டு வரி பேரூராட்சி அலுவலகத்தில் கட்டி ரசிது பெற்று வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் அவர்கள் தலையிட்டு அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் சாலை வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்