ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி

ஊத்தங்கரையில் என்னும் எழுத்தும் பயிற்சி. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 129 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தில் நான்காவது கல்வி ஆண்டுக்கான முதற்கட்ட பயிற்சி 125 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடந்தது. இப்பயிற்சி மேற்பார்வையாளர் ஆசிரியர் வசந்தி, விரிவுரையாளர் ஆசிரியர் நிஷா ஆகியோர் பயிற்சி கொடுத்தனர். இந்த பயிற்சியில் தமிழ் ஆங்கிலம் கணிதம் மற்றும் பயிற்சி அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி