Ex CM-க்கு வெண்கல சிலை வைக்க அனுமதி வேண்டி மனு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை வைக்க அனுமதி வேண்டி காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமாரிடம் மனு அளித்தார். அம்மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: பாரூர் அடுத்த கீழ்குப்பம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆமனக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பகவுண்டர் மகன் துரைசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், சொந்த செலவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் திருவுருவ வெண்கலச் சிலை மற்றும் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்குமாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது. அப்போது முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, தொழிலதிபர் பழனி கோவிந்தராஜ், ராஜப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி