கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஅள்ளி பேரூரில் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கியும், 3, 4, 5 வார்டுகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய நியாயவிலைக்கடை திறந்து வைத்தார். வேலம்பட்டியில் கலைஞர் மேம்பாட்டு நிதி திட்டத்தில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.