கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே எஸ். மோட்டூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் நரசிம்மன் ரிப்பன் வெட்டி திறந்து, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.