இன்று (7-11-2025) ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் கோ எழிலரசி பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். சுற்றுச்சூழல், புகைப்பிடித்தல், புகையிலை, உணவு முறை மாற்றங்கள் புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார். வாய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய்க்கு புகையும், மார்பகப்புற்றுநோய்க்கு ஹார்மோன்களும் காரணம் என்றும், திடீர் உடல் எடை குறைவு, மிகுந்த இருமல், குரல் மாற்றம், சிறுநீர்/மலம் கழிக்கும்போது சிக்கல் அல்லது ரத்தம் வருதல் போன்றவை பொதுவான அறிகுறிகள் என்றும் கூறினார். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார். மருத்துவர் ஆர்த்தி, தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா, செவிலியர்கள் கலைச்செல்வி, சாமுண்டீஸ்வரி, தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.