கல்லாவி: டூவீலர் திருடிய 2 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஓலைப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியின் இன்ஜினியர் பணியாற்றி வரும் ஆனந்த் என்பவர் பணி முடித்துவிட்டு ஓலைப்பட்டி பகுதியில் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த 2 பேர் இன்ஜினியரின் பைக்கை திருடிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் கல்லாவி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கம்பைநல்லூர் சேர்ந்த ஆனந்தன், மற்றும் காரியமங்கலம் சேர்ந்த தமிழரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி