மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்த = வர் ராமன். (வயது 37). இவரது மனைவி சாந்தா. தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் வேலை - செய்து வருகிறார்கள். நேற்று காலை கணவன்-மனைவி 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து மாலை கணவன்-மனைவி 2 பேரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 12 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.