ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் கல்லாவி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.90 லட்சம் ஒதுக்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant) மக்கள் பயன்பாட்டிற்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருமான கழக பொதுக்குழு உறுப்பினருமான டி.எம். தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கழக துணை செயலாளர் சாகுல் அமீது, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேங்கன், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வேடி, ஊத்தங்கரை பேரூர் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் குனசேகரன், கல்லாவி ஊராட்சி மன்ற தலைவர் ராமன், கல்லாவி ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.