ஓசூரில் இருந்து திருவண்ணாமலைவரை செல்லும் சேலம் கோட்டத்திற்கு பாலக்கோடு பணிமனைக்கு சொந்தமானTN29N2921 அரசு பேருந்து இன்ற1 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது அரசு பேருந்திற்கான fast track அட்டை ரீசார்ஜ் செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது. சுங்கச்சாவடிக்கான கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்தை அனுமதிக்க கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அப்பேருந்தை சாலையோரம் திருப்பி அனுப்பினார்கள்.
பின்னர் அந்த அரசு பேருந்தில் இருந்த 60 க்கும் மேற்பட்ட பயணிகளை கீழே இறக்கி, அவ்வழியாக வந்த மாற்று அரசு பேருந்துகளில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அனுப்பி வைக்க முயன்றனர் பின்னர் சுங்க கட்டணத்திற்காண பணத்தை செலுத்தியதுடன், அதன்பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.