கிருஷ்ணகிரி: ஜூன் 3ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முன்னாள் முதலமைச்சரும் மு. கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை ஒட்டி மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினரும், மாநிலத் பிரச்சாரக் குழு செயலாளருமான மருத்துவர் மாலதி நாராயணசாமி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தாமோதரன் ரேவதி தம்பதியினருக்கு ஜூன் 3 ல் பிறந்த பெண்குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து உட்புறநோயாளிகள் மற்றும் பிரசவாடியில் உள்ள 84 நோயாளிகளுக்கு பழம், பிரட், போர்வைகள் வழங்கினர். ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி