கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரபேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் சிங்காரபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மே 11 அன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சம்பந்தமாக பர்கூர் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மேகநாதன் தலைமையில் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உழவர் பேரியக்க மாநில தலைவருமான வேலுசாமி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்