ஊத்தங்கரை: இலவச காது கேட்கும் கருவிகள்; பயனாளிகளுக்கு பொருத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், இன்று (மே 16) பொதுமக்களுக்கு ஆடியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் கண்டறியப்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள இருவருக்கு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக காது கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. குடும்ப காப்பீடு அட்டை உள்ளவர்கள் இலவசமாக காது கேட்கும் கருவி பெற்று பயனடையலாம் என தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி