கிருஷ்ணகிரி: பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே பாம்பாறு ஆற்று பாலத்தில் தூங்கிக் கொண்டிருந்த 65 வயது வேடியப்பன், தூக்க கலக்கத்தில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி