கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கொட்டிகுட்டையைச் சேர்ந்த வேலாயுதம் (70) என்பவர், மனைவி மற்றும் மகள் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கிய அவரை மீட்ட பொதுமக்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.