ஊத்தங்கரை ஒன்றிய மற்றும் பேரூர் கழக திமுக சார்பில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் ஆலோசனையில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பேரூர் கழகம் மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் தமிழக முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.இதனைத்தொடர்ந்து ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதேபோல் மத்திய ஒன்றியம் சார்பில் சிங்காரபேட்டையில் நடந்தது.