ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், காசநோய் பிரிவின் சார்பில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி மே 20, 2026 அன்று நடைபெற்றது. தலைமை மருத்துவ அலுவலர் கோ. எழிலரசி தலைமையில், நோயாளிகளுக்கு சுண்டல், பீன்ஸ், ராகி, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, சத்துமாவு அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. காசநோய் கண்டறிந்து மருந்துகள் உட்கொள்ளும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காசநோய் மேற்பார்வையாளர் ஆகாஷ், சுகாதார பார்வையாளர் ரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி