ஊத்தங்கரை போக்குவரத்து பணிமனை முன் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஊத்தங்கரை போக்குவரத்து பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி மண்டலம் ஊத்தங்கரை போக்குவரத்து பணிமனை முன் TTSF சார்பில் மதுரையில் ஓட்டுநரை செருப்பால் அடித்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழிலாளியை அடித்த உதவி மேலாளரை வேலை நீக்கம் செய்தால் மட்டும் போதுமா? ஏன் இன்னும் கைது செய்யவில்லை? ஓட்டுநர் நடத்துனருக்கான பாதுகாப்பு எங்கே? என கோஷங்கள் எழுப்பப்பட்டு தமிழக அரசு உடனடியாக ஓட்டுநரை தாக்கிய உதவி மேலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் பொதுச்செயலாளர், ராஜா தலைவர், குணசேகரன் சிறப்புரை மற்றும் சென்னை கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி