கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு வர்த்தக முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 10.5 குவிண்டால் கொப்பரை ஏலத்திற்கு வந்தது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ₹177.20-க்கும், குறைந்தபட்சமாக ₹111-க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.