கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பி.இ. முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி. இவர் கடந்த 12-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் அவரைத் தேடியும் எங்கும் இல்லாததால் இதுகுறித்து பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதில் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.