கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா உற்சாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழாவையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டி, கபடி, இசை நாற்காலி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மதிய உணவாக சுவையான விருந்தும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. விழா சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி