சாமல்பட்டி: விவசாயியின் டூவீலர் திருட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள ஆதாலி யூரை சேர்ந்தவர் சம்பத் (58) விவசாயி. இவர் நேற்று முன்தினம்(பிப் 15) இரவு தனது வீட்டு முன்பு டூவீலரை நிறுத்தி இருந்தார். பின்னர் நேற்று காலை பார்த்தபோது அவரது டூவீலர் காணவில்லை. இதுகுறித்து அவர் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டூவீலரை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி