காவேரிப்பட்டினம்: பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் AGAMT-II திட்டத்தின் கீழ் பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் ரூ.47.21 இலட்சம், அகரம் ஊராட்சியில் ரூ.46.81 இலட்சம், எருமாம்பட்டி ஊராட்சியில் ரூ.48.67 இலட்சம், தளிஅள்ளி ஊராட்சியில் ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், எருமாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விமலா மணி என்கிற பெரியசாமி, பெண்ணேஸ்வரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், பாலேகுளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், அகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி ராமமூர்த்தி, மாரிசெட்டிஹள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி