கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி கூர்சம்பட்டி புதுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சென்னையன், கடந்த 31ம் தேதி விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கவியரசியின் தந்தை சங்கர் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன இத்தம்பதி கூர்சம்பட்டி புதுாரில் வசித்து வந்தனர்.