கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 2) இரவு வேலை முடித்து விட்டு வரும் போது அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை.