கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் ஆலோசனையில், கலைஞர் மு. கருணாநிதி 102வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினரும், மாநிலத் பிரச்சாரக் குழு செயலாளருமான மருத்துவர் மாலதி நாராயணசாமி, ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் எழிலரசி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய திமுக வர்த்தக அணி அமைப்பாளர் தாமோதரன் ரேவதி தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து உட்புற நோயாளிகள் மற்றும் பிரசவாடியில் உள்ள 84 நோயாளிகளுக்கு பழம், பிரட், (பெட்ஷீட்) போர்வைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தீபக், அவைத்தலைவர் தணிகை குமரன், பேரூர் கழக செயலாளர் கணேசன், தலைமை செவிலியர் விஜயா, துணை செவிலியர் அலமேலு, ஸ்டாஃப் நர்ஸ் அஸ்வினி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.