ஊத்தங்கரையில் அனுமனுக்கு 600 லிட்டர் பால் அபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமான் ஜெயந்தி விழா நேற்று (டிச.30) நடைபெற்றது.

ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மூலிகை திரவியங்கள் மற்றும் 600 லிட்டர் பால், 250 இளநீர், அபிஷேகம், வடை மாலை, மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி