கெலமங்கலம் அருகே ஜக்கேரியைச் சேர்ந்த வேணுகோபால் (29) என்பவர், அஞ்செட்டியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து, 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். பெரியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் வேணுகோபால் திருமணத்திற்கு மறுத்ததால், அப்பெண் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் நேற்று காதலர் தினத்தில் வேணுகோபாலைக் கைது செய்தனர்.