கிருஷ்ணகிரி அணை பச்சிகானபள்ளி ஊராட்சியில் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 4. 97 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை நீரில் அணைக்கு சுற்றுலா வரும் சிலர் மது பாட்டில்களை வீசியும், பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டியும் அசுத்தம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.