கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது மாதேஷ் மற்றும் தருண்குமார் என்ற இரு மாணவர்கள் மீது நேற்று முன்தினம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.