கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே, மேச்சேரி ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வெற்றி தலைமையிலான அலுவலர்கள், அனுமதி இன்றி மண் ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளை சோதனையிட்டனர். மொத்தம் ஆறு யூனிட் மண் எடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து, மூன்று லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.