கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் பகுதியில் தென்னந்தோப்பில் நடந்து சென்ற முனுசாமி (80), மல்லேஷ் (45), சென்னப்பன் (55) ஆகிய மூவர் மீது தேனீக்கள் கொட்டியது. தென்னை மரத்தில் இருந்த குரங்கு ஒன்று தேனீக்கூட்டைக் கலைத்ததால், தேனீக்கள் கொட்டி 3 பெரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.