தளி அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் கும்மளாபுரம் சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், தேன்கனிக்கோட்டை அருகே பஞ்சேஸ்வரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சிம்மா (36), முனிகிருஷ்ணன் (32) மற்றும் வான மங்கலம் திம்மராஜ் (37) ஆகிய மூவர் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானங்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் சுமார் 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி