தேன்கனிக்கோட்டை: கோயிலில் நகை திருடிய 2 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டி. கொத்தனூர் கிராம தேவதை பூதேவி கோயிலில் கடந்த மாதம் 10-ஆம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த 4 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, கர்நாடக மாநிலம் கோலார் முனுபாகல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (30) மற்றும் ரவி (25) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் நேற்று தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஓசூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி