கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பஞ்சேஸ்வரம் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (63) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததைக் கண்டறிந்தனர். விசாரணையில், அவர் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி விற்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் முனுசாமியை கைது செய்து, அவரிடமிருந்து 158 மதுபாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.