தேன்கனிக்கோட்டை: தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் ப

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 1 லட்சத்தில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய். பிரகாஷ், டி. ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் திரு. டி. ஆர். சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி