தேன்கனிக்கோட்டை: சிறுமியை திருமணம் செய்த விவசாயி மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒசதொட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி கணேஷ், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 20-ஆம் தேதி அன்று பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்புத் துறை சார்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி