தேன்கனிக்கோட்டை: டூவீலரில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்தரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான டூவீலரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அதில் 218 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (40) என்பவரே மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, சுமார் 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி