கெலமங்கலம் சேவல் சண்டை நடத்தியவர்கள் தப்பி ஓட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீசார் பேவநத்தம் சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி கொண்டிருந்த சிலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள். இதை அடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களின் 4 கார்கள், 6 இருவீலர்கள், 4 சேவல்கள் மற்றும் 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி