பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு: போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்துள்ள சாரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு ஆகஸ்ட் 30-ம்-தேதி அன்று பெண் குழந்தை பிறந்து பத்து நாட்கள் ஆன நிலையில் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பவித்ராவின் குடும்பத்தினர் குழந்தையை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கக்கசுந்தரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திவ்யா, நேற்று முன் தினம் செப்-25ம் தேதி அன்று தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி