அஞ்செட்டி அருகே உடற்கல்வி ஆசிரியர் கைது

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு (35) என்பவர் ஓசூர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அஞ்செட்டி அருகே விவசாய நிலத்தில் குப்பை கொட்டச் சென்ற 45 வயதுடைய பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதால், உறவினர்கள் ஓடி வந்து ஆசிரியரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து அஞ்செட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி