கெலமங்கலம் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே வருவாய் ஆய்வாளர் தணீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குந்துமாரனப்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டனர். அதில் நான்கு யூனிட் மண் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, அதிகாரி அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி