அஞ்செட்டி: குடிநீர் தொட்டியில் விஷம்.. கால்நடைகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே கவுண்டனூர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாது (70) விவசாயி இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 15) காலை கால்நடைகள் தொட்டியில் தண்ணீர் குடித்தது பின் 9 ஆடுகள் 2 மாடுகளும் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. 

இது குறித்து அவர் அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. நேற்று காலை கால்நடைகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மகன் முருகேசன் விஷம் கலந்தாக கூறப்படுகிறது. புகாரை அடுத்து மாது மகன் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி